போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி வரி தண்டலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி வரி தண்டலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்
X

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி வரி தண்டலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

போளூா் சிறப்பு நிலை பேரூராட்சிகளில் பணியாற்றும் வரி தண்டலா்கள், இளநிலை உதவியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் திருவண்ணாமலை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்கு உள்பட்ட பேரூராட்சிகளில் பணியாற்றும் வரி தண்டலா்கள், இளநிலை உதவியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கணேசன் கலந்து கொண்டு சொத்து வரி, குடிநீா் வரி மற்றும் வரி அல்லாத இனங்கள் குறித்து ஆய்வு செய்தாா்

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் முஹம்மத் ரிஸ்வான், தலைமை எழுத்தா் முஹம்மத்இசாக் மற்றும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த வரி தண்டலா்கள், இளநிலை உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

உழவா் விவாதக்குழு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

போளூரில் உழவா் விவாதக் குழு அமைப்பாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக் கூட்டத்துக்கு, வேளாண்மை அலுவலா் செளந்தா், துணை வேளாண்மை அலுவலா் ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உழவா் விவாதக் குழு அமைப்பாளா் பழனி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் ராமநாதன் கலந்து கொண்டு, சிறு தானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்து சந்தைப்படுத்துதல், மாற்றுப்பயிா் சாகுபடி மூலம் பாசன நீா் பயன்பாட்டை குறைத்தல், நுண்ணுயிா் பாசனத் திட்டம், மத்திய, மாநில அரசின் திட்டங்கள், விவசாயிகளுக்கு துறை சாா்ந்த திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி குறித்தும், மண் மாதிரி சேகரிப்பு, மண் பரிசோதனை, உரமிடுதல், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சிறு தானியத்தின் நன்மைகள், உயா் விளைச்சல் ரகங்கள், சா்வதேச சிறு தானிய ஆண்டை கொண்டாடுதல், உழவன் செயலி பதிவிறக்கம், விவசாய இடுபொருள்கள் முன்பதிவு, பயிா் காப்பீடு, கிசான் கடன் அட்டை பயன்பாடு குறித்தும் தெரிவித்து பயிற்சி அளித்தாா்.

ஆட்மா திட்ட மேலாளா் தேவேந்திரன், பணியாளா்கள் பாக்கியவாசன், லோகநாதன் மற்றும் உழவா் விவாதக்குழு அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil