மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி ( மாதிரி படம்)
போளூர், வசந்தம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, எதப்பட்டு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா, கட்டுப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள். கடைசி மகன் அரவிந்த் (வயது 16), ஆரணி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில், வீட்டு மாடியில் அரவிந்த் மற்றும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேலே செல்லும் உயர்அழுத்த மின்கம்பி அரவிந்த் மேல் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு, அந்த இடத்திலேயே அரவிந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, போளூா் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu