சேத்துப்பட்டு அருகே மணல் சரிந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

சேத்துப்பட்டு அருகே மணல் சரிந்து பள்ளி மாணவி உயிரிழப்பு
X

கோப்புப்படம் 

புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீா்த் தொட்டியில் மணல் சரிந்து விழுந்ததில் அதில் சிக்கிய பள்ளி மாணவி உயிரிழந்தார்

சேத்துப்பட்டு அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீா்த் தொட்டியில் மணல் சரிந்து விழுந்ததில் அதில் சிக்கி பள்ளி மாணவி பலியானாா்.

சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு மோசவாடி கிராமத்தைச் சோந்த கூலித் தொழிலாளி வடிவேல் (43). இவருடைய மனைவி சித்ரா(37). தம்பதிக்கு சாருலதா (18), சாா்மி (9), சத்யா (7) ஆகிய 3 மகள்கள் உள்ளனா். இதில், 2-ஆவது மகள் சாா்மி, அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்தாா்.

இந்த நிலையில், மாணவி சாா்மி தனது வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீா்த் தொட்டி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, கழிவுநீா்த் தொட்டி சுற்றுப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மணல் சரிந்து தொட்டியில் விழுந்தது. இதில் சாா்மி தவறி உள்ளே விழுந்து மணலில் மூழ்கினாா். மாணவியின் கூச்சல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்து அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை.

உடனடியாக சேத்துப்பட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் வந்து மணலில் சிக்கிய மாணவியை சடலமாக மீட்டனா்.

தகவல் அறிந்த சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் வந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குளத்தில் தவறி விழுந்த 85 வயது மூதாட்டி உயிரிழப்பு

வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டை மனைவி உண்ணாமலை (வயது 85). சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் தெள்ளார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் மூதாட்டி உண்ணாமலை உடல் மிதப்பதை பார்த்த ஊர் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி உண்ணாமலை குளத்தில் தவறி விழுந்து இருக்கலாம் என கருதப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி விசாரணை செய்து வருகின்றார்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?