ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கணவருடன் ஊராட்சி மன்றத் தலைவா் கைது
ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி, கணவா் மணி
நெசவுத் தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவா், அவரது கணவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்ப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணி. விவசாயி. இவரது மனைவி வேண்டாமணி, கீழ்ப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த எம்ஜிஆர் என்பவர் 2021- 22-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டது. அவரும் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் எம்ஜிஆர் ஊராட்சி மன்ற தலைவி வேணி மணியிடம் சென்று, வீட்டு ரசீது இதுவரை தரவில்லை. எனவே வீட்டு ரசீது தாருங்கள், என்று கேட்டார்.அப்பொழுது, நீ வீடு கட்டியதற்கு எனக்கு எதுவும் செலவுக்கு பணம், கொடுக்கவில்லை ரூ.30 ஆயிரம் கொடுத்தால் வீட்டு ரசீது தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன்' எனக் கூறிவிட்டனராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத எம்ஜிஆர் மன வேதனை அடைந்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகனிடம் எம்ஜிஆா் புகாா் அளித்தாா்.
.புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், கோபிநாதன், முருகன் மற்றும் போலீசார் உடன் சென்று நேற்று காலை ரூ.30 ஆயிரத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவி எம்.ஜி.ஆர். இடம் கொடுத்து ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணியிடம் கொடுக்கும்படி கூறினர்.
விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவி வேண்டாமணி, அவரது கணவா் மணி ஆகியோரிடம் 30 ஆயிரத்தை எம்ஜிஆா் கொடுத்தாா்.
ஊராட்சி மன்ற தலைவியிடம் வேணிமணியிடம் எம்ஜிஆர் அதனை கொடுத்தபோது அதனை அவர் பெற்றுக்கொண்டார். அப்போது மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu