விபத்தில் சிக்கியவரை தனது வாகனத்தில் அழைத்து சென்று காப்பாற்றிய வருவாய் கோட்ட அலுவலர்

விபத்தில் சிக்கியவரை தனது வாகனத்தில் அழைத்து சென்று காப்பாற்றிய வருவாய் கோட்ட அலுவலர்
X

விபத்தில் சிக்கியவரை தனது வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சேர்த்த வருவாய் கோட்ட அலுவலர்

போளூர் பைபாஸ் சாலையில் விபத்து காயமுற்றவரை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று காப்பாற்றிய வருவாய் கோட்ட அலுவலர்

செய்யாறு, கொருக்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 50) என்பவர் தனது மகன் கோபி என்பவருடன் இன்று (11.11.2021) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில்இரு சக்கர வாகனத்தில் ஆரணியில் இருந்து போளூர் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலேயே கால் மாட்டிக்கொண்டு கீழே விழுந்ததில் கஸ்தூரிக்கு பலத்த காயம் ஏற்பட்டு சுமார் அரை மணி நேரம் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயம் அவ்வழியே வந்த ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் கவிதா, மேற்படி கஸ்தூரி என்பவரை மீட்டு தனது அரசு வாகனத்திலேயே அழைத்து வந்து அத்திமூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!