ரேணுகாம்பாள் கோயில் ஆடி வெள்ளி திருவிழா ஆலோசனைக் கூட்டம்!

ரேணுகாம்பாள் கோயில் ஆடி வெள்ளி திருவிழா ஆலோசனைக் கூட்டம்!
X

ரேணுகாம்பாள் கோயில் ஆடி வெள்ளி ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம்

படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் ஆடி வெள்ளி திருவிழா குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் ஆடி வெள்ளி திருவிழா குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேணுகாம்பாள் அம்மன் கோயில் செயல் அலுவலர் சங்கர் அனைவரையும் வரவேற்றார்.

ஆடி வெள்ளி திருவிழா ஏழு வாரமும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது, எனவே தரிசன டிக்கெட் வழங்கும் இடம், முடி காணிக்கை , பொங்கல்லிடும் பகுதி, வாகனங்கள் நிறுத்தும் பகுதி, நுழைவு வெளியேறும் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். வாகன நிறுத்துமிடம், கச்சேரி மேடை, தற்காலிக பேருந்து நிலையம், கடைவீதிகளில் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஊர் எல்லைக்கு முன்பே வாகனங்கள் நிறுத்திடவும் ஒழுங்குபடுத்த வேண்டும்.

உள்ளாட்சித் துறை சார்பில் குப்பை அகற்றல் சுகாதாரப் பணி மேற்கொள்ள வேண்டும் . பக்தர்களுக்கு குடிநீர் வசதி தற்காலிக கழிவறை வசதிகள், குளியலறை வசதி செய்திட வேண்டும் . கிருமி நாசினி ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு தூய்மை பணி செய்திட வேண்டும்.

சுவாமி திருவீதி உலா பகுதிகள், கிராம தெருக்கல், ஆற்றுப் பாதை, மலைப்பாதை, ராமர் கோயில் பாதை ,ஆஞ்சநேயர் கோயில் பாதை, ரேணுகா கொண்டாபுரம் பகுதி சாலை , ஆகிய பகுதிகளில் கூடுதல் குடிநீர் குழாய்கள், மின்விளக்குகள், சுகாதார அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

போக்குவரத்து துறை சார்பில் ஆரணி ,வேலூர், திருவண்ணாமலை, ஆற்காடு ,காஞ்சிபுரம், சென்னை, பெங்களூரு ,பகுதிகளுக்கு தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். குறிப்பாக தொலைத் தொடர்பு துறை சார்பில் தொலைபேசி இணைப்புகள் தடையின்றி இயங்கவும் செல்போன் அலைக்கற்றை வேகத்தை அதிகப்படுத்தி தரவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

தொலைபேசி இணைப்பு வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும். பக்தர்கள் சிரமமின்றி பண பரிவர்த்தனை மேற்கொள்ள ஏடிஎம் இயந்திரங்களை கூடுதலாக அமைத்து தர வேண்டும் என கூட்டத்தில் பேசியவர்கள் தங்களது கருத்துக்களாக தெரிவித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில், ரேணுகாம்பாள் கோயில் கண்காணிப்பாளர் ஆறுமுகம், கணக்காளர் சீனிவாசன், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், ஜோதி முருகன், போளூர் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் ,தீயணைப்பு நிலைய அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ,வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு