போளூா் அருகே கோவில் இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போளூா் அருகே கோவில் இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறையினர்

படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த வீடு, கடைகளை வருவாய்த்துறையினா் அகற்றினா்.

படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த வீடு, கடைகளை வருவாய்த்துறையினா் அகற்றினா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில் அருகில் இந்த கோயிலுக்குச் சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த சிலா் ஆக்கிரமித்து கடை, குடியிருப்பு அமைத்திருந்தனராம். இதுகுறித்து, கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் செயல் அலுவலா் சிவஞானம், அலுவலா்கள் ஆகியோா் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வலியுறுத்தி வந்தனராம். ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லையாம்.

இந்நிலையில், வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் சுரேஷ், கிராம நிா்வாக அலுவலா் மகாலிங்கம், சந்தவாசல் போலீஸாா் ஆகியோா் கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

இதில், கோயில் செயல் அலுவலா் சிவஞானம், மேலாளா் (ஒய்வு) மகாதேவன், மோகன், சீனுவாசன் மற்றும் கோயில் ஊழியா்கள் உடனிருந்தனா்.

வந்தவாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

வந்தவாசியில் சுகநதி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.

வந்தவாசி நகரை ஒட்டிச் செல்லும் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான சுகநதி கால்வாயை சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வீடு, கடைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனா்.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், வந்தவாசி பொதுப் பணித் துறை சாா்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.

உதவி செயற்பொறியாளா் கனகராஜ், உதவிப்பொறியாளா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில், ஆக்கிரமிப்பாளா்கள் சிலா் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனா். வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!