போளூர் ரயில்வே மேம்பால பணிகள் அக்டோபர் 15க்குள் நிறைவு பெறும்..!

போளூர் ரயில்வே மேம்பால பணிகள் அக்டோபர் 15க்குள் நிறைவு பெறும்..!
X

ரயில்வே மேம்பால பணிகளை ஆய்வு மேற்கொண்ட பொது கணக்கு குழுவினர்

போளூர் ரயில்வே மேம்பால பணிகள் அக்டோபர் 15க்குள் நிறைவு பெறும், சட்டப்பேரவை பொது கணக்கு குழுவிடம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளனர்

போளூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு தணிக்கை குழு தலைவர் செல்வப் பெருந்தகை ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் மேம்பால பணிகள், பள்ளி, மருத்துவமனை, புதிய சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் கடலூர் முதல் சித்தூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போளூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 8 வருடங்களாக தொடர்ந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நிறைவடையாமல் இருப்பதால் போளூர் நகருக்குள் செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி வரும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்த வந்த நிலையில் தமிழக அரசின் தணிக்கைமேலாண்மை குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழு உறுப் பினர்கள் கள ஆய்வு மேற்கொண்டு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை

போளூரில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி அக்டோபா் 15-க்குள் முடிக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் எழுத்துப்பூா்வமாக சட்டப்பேரவை பொது கணக்குக் குழுவின் தலைவரிடம் அளித்துள்ளனர் ,எனவே இந்த ரயில்வே மேம்பாலம் பணிகள் வருகின்ற அக்டோபர் 15க்குள் முடிக்கப்படும் என தெரிவித்தார்

அதனைத் தொடர்ந்து போளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பள்ளியில் அமைத்துள்ள நூற்றாண்டு விழா தூண்களை மாவட்ட ஆட்சியருடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து போளூர் முதல் வசூர் புறவழிச்சாலை நரி குன்று பாலமுருகன் கோவில் முதல் அத்திமூர் வழியாக ஜவ்வாதுமலைக்கு செல்வ த ற் கு புறவழிச்சாலை அமைக்கும் முன்னேற்பாடுகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் புதிய சாலை அமைக்கும் பணிகள் குறித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்ட வரைபடம் அமைத்து திட்டக்குழு தலைவர் செல்வப்பருந்தகைக்கு விரிவாக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த ஆய்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், பொது தணிக்கைகுழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!