உயர் கோபுர மின்விளக்கு பழுதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

உயர் கோபுர மின்விளக்கு பழுதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
X

உயர்மின் கோபுர மின் விளக்கு  பழுதானதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்

Public protest against high tower lamp failure

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் களியம் காந்திநகர் , பகுதியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 2019- 20 ஆம் ஆண்டு ரூபாய் 7 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு ஊராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இந்த உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்த நிலையில் உள்ளது.இதனால் அந்தப் பகுதி இரவு வேலைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்திலும் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அந்தப் பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் மகாதேவன் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து உயர் கோபுர மின் விளக்கை சீரமைப்பதாக கூறிய பின்னர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!