போளூர் பேரூராட்சி: ஒரு கண்ணோட்டம்
போளூர் பேரூராட்சி அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் மிகப்பெரியது போளூர் பேரூராட்சி ஆகும். போளூர் சட்டமன்றத் தொகுதியிலும் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் உட்பட்டது.
போளூர் பேரூராட்சியினாது 1946 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக உருவாக்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நகரம் நகராட்சி அந்தஸ்து தகுதி இருந்தும் நகராட்சியாக மாற்றபடாமல் உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிலை நம்பி இப்பகுதி மக்கள் அதிகம் உள்ளனர். அன்றாட வேலைக்கு இந்த ஊரில் இருந்து இடம்பெயர்ந்து செல்பவர்கள் மிக அதிகம்.
போளூர் பேரூராட்சியில் மொத்த வாக்காளர்கள் மொத்தம் 21984 பேர் அதில் ஆண் வாக்காளர் 10365 பேர், இதில் பெண் வாக்காளர்கள் 11620, மூன்றாம் பாலினம் வாக்காளர் ஒருவர் ஆகும்.
போளூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஆண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டு-8 பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டு-9 இதில் 1 வார்டு தனி வார்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 18 வார்டுகளில் 18 வது வார்டுஅதிகளவு வாக்காளர் கொண்ட வார்டு , குறைந்த வாக்காளர்களை கொண்ட வார்டு 13-வது வார்டு ஆகும்.
மொத்த வாக்குச்சாவடி மையங்கள் 30. இதில் ஆண்களுக்கு என 12 வாக்கு சாவடி மையங்கள், பெண்களுக்கு 12 வாக்குச்சாவடி மையங்கள், பொதுவான வாக்குச்சாவடி மையங்கள் 6 எனவும் மொத்தம் 30 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்கள் பொதுபிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
பெண்கள் பொதுபிரிவினருக்கான வார்டுகள் 4,5,7,9,10,11,16,18
பொது வார்டுகள் 1,2,3,8,12,13,14,15,17
தேர்தல் அதிகாரி செயல் அலுவலர் முகமது ரிஜ்வான்
போளூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயத் தொழிலை மேலும் செம்மையாக அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் பொதுமக்களிடம் அதிகம் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu