தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் போராட்டம்

தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் போராட்டம்
X

காலிகுடங்களுடன்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

கல்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போளூர் தாலுகா செய்திகள்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் மேல்கல்பட்டு தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

கல்பட்டு கிராமத்தில் காளைவிடும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு காளை விடும் விழாவை தொடங்கிவைக்க ஊராட்சி மன்ற தலைவர் திலகவதியும், அவரது கணவர் ஜீவரத்தினமும் அந்த வழியாக சென்றனர்.

அவர்களிடம் தங்கள் பகுதியில் குடிநீர் வசதியை சரிசெய்ய கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அதே வழியாக வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியை வழிமடக்கி, தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து ஊராட்சி தலைவரிடம் பேசி விரைவில் சரிசெய்யப்படும் என்று அவர் கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து ஊராட்சி மன்றம் சார்பில், தற்காலிகமாக மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.

100 நாள் வேலை வழங்கக்கோரி சாலை மறியல்:

போளூர் அருகே உள்ள அத்திமூர் களியம் காலனியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணி அளவில் போளூரில் இருந்து ஜவ்வாதுமலை செல்லும் சாலையில் அத்திமூர் களியம் பாலம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலைகளை சரிவரை எங்களுக்கு கொடுப்பதில்லை என்றும் எங்களை புறக்கணிக்கிறார்கள் என்றும், 100 நாள் வேலை வழங்கக்கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ai marketing future