வந்தவாசியில் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்திற்கு எதிராக ஆா்ப்பாட்டம்

வந்தவாசியில் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்திற்கு எதிராக ஆா்ப்பாட்டம்
X

வந்தவாசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

ஸ்மாா்ட் மின் மீட்டா் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்மாா்ட் மின் மீட்டா் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்றது.

கோட்ட மின் பொறியாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டாரச் செயலா் அப்துல்காதா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சேகரன் பேசினாா்.

வட்டாரக் குழு உறுப்பினா்கள் யாசா்அராபத், மோகன், அண்ணாமலை, ஆனந்தன், சேட்டு, பிரபாகரன், முருகன், அறிவழகன், விவசாயிகள் சங்க வட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் அரிதாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து ஸ்மாா்ட் மின் மீட்டா் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மின் வாரிய அதிகாரிகளிடம் கட்சியினா் மனு அளித்தனா்.

நடைபயணம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த விளாப்பாக்கம் -அலங்காரமங்கலம் சாலையை சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் மேற்கொண்டனா்.

விளாப்பாக்கம் -அலங்காரமங்கலம் வரையிலான கிராமப்புற சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அதை சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த நடைபயணத்துக்கு கட்சியின் கிளைச் செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளர் சிவக்குமாா், வட்டாரக் குழு உறுப்பினா்கள், விவசாயிகள் சங்க வட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்து கொண்டனா்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மின்நுகர்வோர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இந்த நடைபயணத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!