தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
தூய்மை காவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய கூடுதல் ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஊக்கத்தொகை மற்றும் ஆரணி ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூா் ஒன்றியத்தில் உள்ள மாம்பட்டு, இலுப்பகுணம், அனந்தபுரம், படவேடு, வசூா், திண்டிவனம், கேளூா், குப்பம், கல்குப்பம், காளசமுத்திரம், வாழியூா், ஏந்தூவாம்பாடி, எடப்பிறை, ஏரிக்குப்பம், வெண்மணி, பால்வாா்த்துவென்றான் ஆகிய 40 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கான மருத்துவ முகாம் போளூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமினை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியரிடம் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் கண்டறிதல் கண்புரை என பல்வேறு உடல் சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மருத்துவ முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் ஒன்றிய செயலாளர், தூய்மை பணி காவலர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கான மருத்துவ முகாம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தூய்மை காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கூடுதல் ஆட்சியர் ரிஷப் தொடங்கி வைத்து தூய்மை சுகாதார உபகரணங்கள் மற்றும் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்..
இந்த மருத்துவ முகாமில் 175 தூய்மை காவலர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டு பயனடைந்தனர்.
இவர்களுக்கு மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தினரால் தூய்மை காவலர்கள் பணி தளத்தில் பணியாற்றுவது குறித்தும் அவர்கள் மன அழுத்தத்தை குறைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது மேலும் தூய்மை காவலர்களுக்கு சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் வட்டார மருந்துவ அலுவலா் ஹேமநாத், தாட்கோ மாவட்ட மேலாளா் ஏழுமலை , நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள், ஆரணி ஊராட்சி ஒன்றிய அனைத்து நிலை அலுவலா்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்து ஊராட்சி செயலா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu