சந்தவாசல் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

சந்தவாசல் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
X

மாதிரி படம்

சந்தவாசல் துணைமின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் துணைமின் நிலைய பகுதிகளில் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி கல் வாசல், சந்தவாசல், ஏரிக்குப்பம், நடுக்குப்பம், கேளூர், அதுவாம்பாடி, வடமாதிமங்கலம், படவேடு, ஒன்னுபுரம், அம்மாபாளையம், கண்ணமங்கலம், குப்பம், வாழியூர், காளசமுத்திரம், அதிமலைபட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!