கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலை அருகே போளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

போளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

போளூர் துணை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதை சார்ந்த 8 துணை அஞ்சல் அலுவலகங்கள் கிளை அஞ்சலகங்கள் அனைத்து ஊழியர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு துணை அஞ்சலக அலுவலர் பச்சையப்பன் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில துணைத்தலைவர் அயூப்கான் சிறப்புரையாற்றினார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அஞ்சலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாடத்தால் அஞ்சலகங்களில் பணிகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Tags

Next Story