/* */

பாலிடெக்னிக் மாணவனுக்கு டெங்கு பாதிப்பு

கண்ணமங்கலம் அருகே பாலிடெக்னிக் மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டதால், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு

HIGHLIGHTS

பாலிடெக்னிக் மாணவனுக்கு டெங்கு பாதிப்பு
X

டெங்கு தடுப்பு பணியில் சுகாதார அதிகாரிகள் 

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவன். இவர், சென்னையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் என தெரியவந்தது. தற்போது சிகிச்சை முடிந்து கேசவபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் மாணவர் தங்கியுள்ளார். இதையடுத்து டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க கிராமம் முழுவதும் படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது.

மேலும் திருவண்ணாமலை உதவி பூச்சியியல் ஆய்வாளர் கணபதி, வட்டார மேற்பார்வையாளர் ஜெயசீலன், மருத்துவமில்லா வட்டார மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ராமு, தமிழரசன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு தேவையில்லாத இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி, கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 20 Oct 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  9. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  10. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்