ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க அமைச்சரிடம் மனு: போளூர் வியாபாரிகள் சங்கம் முடிவு

ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க அமைச்சரிடம் மனு:  போளூர் வியாபாரிகள் சங்கம் முடிவு
X

போளூரில்  நடைபெற்ற  தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம்

போளூரில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்க அமைச்சரிடம் மனு அளிக்க முடிவு

மேம்பால பணி விரைவில் முடிக்க கோரி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய வியாபாரிகள், ரயில்வே மேம்பால பணிகள் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வருவதாகவும் இதனால் வியாபாரிகள் பெறும் சிரமத்துக்கு உள்ளாவதால் இப்பணியின் விரைவில் முடிக்க வேண்டும்.

மேலும் இந்தப் பணி காலதாமதம் ஆவதால் போளுரை சுற்றியுள்ள ஹவுசிங் போர்டு, வெண்மணி, செங்குணம், முருகா பாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் போளூர் நகரத்திற்கு வருவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.

ரயில்வே மேம்பால பணி விரைவில் முடிக்கும் பட்சத்தில் இதற்கு தீர்வு ஏற்படும் என்று அனைவரும் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் போளூர் ரயில்வே மேம்பால பணி விரைவில் முடிக்க கோரி நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ . வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை அளிப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

போளூர் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை வியாபாரிகள் மார்ச் 31 செலுத்திட வேண்டும் என போளூர் ஊராட்சி ஒன்றியம் அறிவித்த நிலையில் அபராதங்களை தவிர்க்குமாறு வியாபாரிகளை கூட்டம் வலியுறுத்தியது.

மேலும் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பேருந்துகளின் ஊழியர்கள் போளூர் பைபாஸ் ரோட்டிலேயே இறக்கி விடுகின்றனர், இதனால் போளூர் நகருக்கு வரும் பயணிகள் மிகவும் பாதிப்படைகின்றனர் பேருந்துகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக போளூர் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் ஹரி , பொருளாளர் ராஜேஷ் குமார் , இணை செயலாளர் மகேந்திர குமார் மற்றும் நிர்வாகிகள், ரோட்டரி அரிமா சங்க நிர்வாகிகள், ரெட் கிராஸ் சங்க நிர்வாகி சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!