ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை அருகே கொங்கராம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாநாராயணன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி கலந்து கொண்டு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பை பயன்படுத்த வேண்டும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.
இதில் துணைத்தலைவர் மாதவன், வார்டு உறுப்பினர்கள், மக்கள் நல ஒருங்கிணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) ஜானகிராமன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu