சுகாதார நிலையமா , மாட்டுத் தொழுவமா மக்கள் குழப்பம்

சுகாதார நிலையமா , மாட்டுத் தொழுவமா மக்கள் குழப்பம்
X

சுகாதாரம் நிலையம் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகள்

போளூர் அருகே துணை சுகாதார நிலையம், மாட்டு தொழுவமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு மாம்பட்டு, மேற்குகொல்லைமேடு, எழுவாம்பாடி, ஜடதாரிகுப்பம், எடப்பிறை என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், சுகாதார நிலையம் எதிரே மாடுகளை கட்டி வைத்து மாட்டுத் தொழுவமாக மாற்றியுள்ளனா். மேலும், மாட்டுச் சாணத்தை அருகிலேயே கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதோடு, ஈ, கொசு உற்பத்தியாகி சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

இது தவிர டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா என பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் போது அச்சத்துடனே செல்கின்றனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து துணை சுகாதார நிலையத்தில் தொடர்பு கொண்ட போது வட்டார தலைமை மருத்துவரிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

வந்தவாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 பேர் அனுமதி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் வந்தவாசி அடுத்த சென்னாவரம், நல்லூர், வல்லம், நெல்லியாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 4 பேர் டெங்கு பாதிப்பால் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் உயர் சிகிச்சைக்காக சென்று விட்டனர். ஒருவர் சிகிச்சை முடிந்து நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மற்ற ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself