ஆளியூர் கிராமத்தில்சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
![ஆளியூர் கிராமத்தில்சிறப்பு பட்டா மாறுதல் முகாம் ஆளியூர் கிராமத்தில்சிறப்பு பட்டா மாறுதல் முகாம்](https://www.nativenews.in/h-upload/2022/04/07/1511548-202204061812538870special-strap-change-campsecvpf.gif)
ஆளியூர் கிராமத்தில் நடந்த சிறப்பு பட்டா மாறுதல் முகாமில், 10 பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை மண்டல துணை தாசில்தார் சரவணன் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா ஆளியூர், சோலைஅருகாவூர் ஆகிய கிராமங்களை சேர்த்து ஆளியூர் கிராமத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது. மண்டல துணை தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். ஆளியூர் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் தரணி, சோலைஅருகாவூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், முன்னாள் தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ஹேமலதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு உறுப்பினர் ரேகாபுஷ்பராணி ராமதாஸ் கலந்துகொண்டார். முகாமில் பட்டா மாறுதல், பட்டா பெயர் திருத்தம், புதிய பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 12 பேர் மனு அளித்தனர்.
இதில் உரிய ஆவணம் அளித்த 10 பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை மண்டல துணை தாசில்தார் சரவணன் வழங்கினார். வருவாய்த்துறையினர், நில அளவைத்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆளியூர் கிராம நிர்வாக அலுவலர் மணிராஜா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu