பர்வதமலை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வ அமைப்புகள்

பர்வதமலை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வ அமைப்புகள்
X
போளூர் அடுத்த பர்வதமலையில் தூய்மைப் பணியில் தன்னார்வ அமைப்புகள் களமிறங்கி தூய்மைப் படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் வனத்துறையுடன் இணைந்து சுவாமி விவேகானந்தா மிஷின், ஸ்ரீ அண்ணாமலையார் ஆதீனம் அன்னதான அறக்கட்டளை, பர்வதமலை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆகியன இணைந்து பர்வதமலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் சுவாமி சதானந்த சரஸ்வதி சுவாமிகள் துவக்கிவைத்தார் . நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் நல அலுவலர் ராமச்சந்திரன் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.

இந்த தூய்மைப் பணியில் 4,500 அடி உயரமுள்ள பர்வத மலையில் இருந்து 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் 1500 கிலோ பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை மலையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு தென்மாதிமங்கலம் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!