நெல் கொள்முதல் முறைகேடு கண்டித்து போளூரில் விவசாயிகள் சாலை மறியல்

நெல் கொள்முதல் முறைகேடு கண்டித்து போளூரில் விவசாயிகள்  சாலை மறியல்
X

விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்  

நேரடி நெல் கொள்முதல் முறைகேடு கண்டித்து போளூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வேலூர்- சித்தூர் சாலையில் போளூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.

போளூர் சுற்றுவட்டார கிராமங்களில் அனைத்து விவசாயிகளும் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தான் அறுவடை செய்த நெல்லை கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரும் நெல்லை பல நாள் காத்திருந்து விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல் இன்று காலை சுமார் 7 மணி அளவில் விவசாயிகள் கொண்டு வந்த நிலை சரியாக எடை போடாமல் இடையில் முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டும் கண்டுகொள்ளாததால் இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போளூர் விவசாய சங்கத் தலைவர் பார்த்திபன் தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சித்தூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சுமார் 8 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரை மணி நேரம் நீடித்த இந்த சாலைமறியலில் போளூர் காவல்துறையினருக்கு தகவல் அறிந்து உடனே விரைந்து வந்து விவசாயிகளிடம் அதிகாரியிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் மறியலை கைவிடுங்கள் என்று கூறினர்.

ஆனால் விவசாயிகள் மறியலை கைவிடுவதாக இல்லை உடனே காவல்துறையினர் போளூர் கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், சங்கர் போன்றவர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சூப்பிரண்டு தாமோதரன் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் இதுபோல் தவறு நடக்காது என்று ஒழுங்குமுறை விற்பனை கூடம் சூப்பிரண்டு உறுதி கூறினர்.

பிறகு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!