ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் உடலுறுப்புகள் தானம்
மூளைச்சாவு ஏற்பட்டதால் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவவீரர் சரவணன்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், ஆா்.குன்னத்தூரைச் சோந்தவா் சரவணன் (39). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவா், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி போளூா் - ஆரணி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியதில், பலத்த காயமடைந்த சரவணன் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சரவணனுக்கு நேற்று முன்தினம் இரவு (பிப்.20) மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.
அதன்படி நேற்று மாலை சரவணனின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
கல்லீரல், இடதுபுற சிறுநீரகம் சிஎம்சி ராணிப்பேட்டை வளாகத்துக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
சரவணன் மூளைச்சாவு அடைந்தாலும், தானமாக வழங்கப்பட்ட அவரது உடலுறுப்புகள் மூலம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. உடல் உறுப்புகளை தானமாக பெற்றவர்கள், சரவணனின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மூளைச்சாவு அடைந்த சரவணனுக்கு மனைவி ரேகா, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu