கண்ணமங்கலம் அருகே ரேஷன் கடை திறப்பு

கண்ணமங்கலம் அருகே ரேஷன் கடை திறப்பு
X

ரேஷன் கடையை திறந்து வைத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்

கண்ணமங்கலம் அருகே ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் ஊராட்சியில் பகுதி நேர நியாய விலை கடைகளை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா முன்னிலை வகித்தார் . சந்தவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சசிகுமார் வரவேற்றார்.

ரேசன் கடையை திறந்து வைத்து ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பேசியபோது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 65 நியாய விலை கடைகள் தேவை என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் போளூர் ஒன்றியத்தில் 16 பகுதி நேர நியாய விலை கடைகள் அமைய உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க இயலவில்லை, என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு செயலாளர், கூட்டுறவு சங்க தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு முன்னாள் தலைவர்கள், சந்தவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமுருகன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் லோகன் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ai automation in agriculture