சேத்துப்பட்டு மாதா மலைக்கு செல்லும் புதிய பாதை திறப்பு

சேத்துப்பட்டு மாதா மலைக்கு செல்லும் புதிய பாதை திறப்பு

மாதா மலைக்குச் செல்லும் புதிய சாலையை திறந்து வைத்த மயிலை பேராயர் ஜார்ஜ்

சேத்துப்பட்டு மாதா மலைக்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலையை சென்னை மயிலை உயா்மறை மாவட்ட பேராயா் திறந்து வைத்தாா்.

சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் உள்ள நெடுங்குணம் மாதா மலைக்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலையை சென்னை மயிலை உயா்மறை மாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நெடுங்குணம் கிராமத்தில் மலை மீது தூய லூர்து அன்னை தேவாலயம் அமைந்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நெடுங்குணம் மாதா மலைக்கு பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் நடைபெறும் சிறப்பு திருப்பலிக்கு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கர்நாடகா ஆந்திரா என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் தூய லூர்து அன்னை சிறப்பு திருப்பலிக்கு வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்கு மலைக்கு புதிய பாதை மற்றும் தூய லூர்து அன்னையின் கொடிமரம் ஆகியவற்றை பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ் அமைத்தார்.

இதற்கான திறப்பு விழா சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி கலந்துகொண்டு மாதா மலைக்கு செல்லும் புதிய சாலையை திறந்து வைத்து மலையின் மீது புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தை அர்ச்சித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மறை மாவட்ட பேராயர் ஜான் ராபர்ட் சேத்துப்பட்டு பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ் உதவி பங்குத்தந்தை சதீஷ் சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா முருகன் சேத்துப்பட்டு பேரூராட்சி மூத்த உறுப்பினர் நகர செயலாளர் முருகன் பங்கு பேரவை துணைத்தலைவர் இயேசு பாதம், பங்கு பேரவை செயலாளர் வேளாங்கண்ணன், பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட பரிபாலகர் ஜான் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பங்குத்தந்தையர்கள், பேராயர்கள், கிறிஸ்தவர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story