திருவண்ணாமலை அருகே கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

திருவண்ணாமலை அருகே கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைப்பு
X

கேபிள் டிவி அலுவலகத்துக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

திருவண்ணாமலை அருகே சந்தா தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் அரசு கேபிள் டி.வி. சேவையை ஆபரேட்டர் நடராஜன் நடத்தி வந்தார்.

அவர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 49 ஆயிரத்தை செலுத்த கோரி பலமுறை தெரிவிக்கப்பட்டு இருந்தும் செலுத்தாததால் போளூர் வட்டாட்சியர் சண்முகம் முன்னிலையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்தை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

அப்போது மண்டல துணை வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி ,சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil