படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் புதிய ராஜகோபுரம் திறப்பு

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் புதிய ராஜகோபுரம் திறப்பு
X

கோயில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜையுடன் புதிய ராஜகோபுர வாசல் வழியாக பசு, யானைகளுடன் பக்தர்கள் அழைத்து வரப்பட்டனர்.

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் 6-ந்தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கவிருக்கும் நிலையில் புதிய ராஜகோபுரம் திறக்கப்பட்டது.

கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் புகழ்பெற்ற ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. 64 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் கருவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாகும்பாபிஷேக விழா இந்த ஆண்டு வருகிற 6-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிமுதல் மணிக்குள் நடைபெறஉள்ளது.

இக்கும்பாபிஷேக விழாவுக்கு புதியதாக 5 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு, கோவில் முழுவதும் சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

மேலும் ராஜகோபுர வாசலுக்கு புதிதாக தேக்கு மரக்கதவுகள், ராஜகோபுரம் உச்சிக்கு செல்லும் படிக்கட்டுகளுடன், பஞ்சவர்ணம் தீட்டுதல் உள்பட பல்வேறு சீரமைப்புப்பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக விழாவின் துவக்கமாக காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக, லட்சுமி, கோபூஜை, கஜபூஜைகளுடன், கோயில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜையுடன் புதிய ராஜகோபுர வாசல் வழியாக பசு, யானைகளுடன் பக்தர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம் நடைபெற்றது.

5-ந்தேதி சனிக்கிழமை காலை விசேஷ சந்தியுடன், நான்காம் கால பூஜை, மாலை 6 மணியளவில் ஐந்தாம் கால பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து 6-ந்தேதி அதிகாலை 5 மணியளவில் ஆறாம் கால பூஜையுடன், 7.15 மணியளவில் புதிய ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும், 8 மணியளவில் ரேணுகாம்பாள், சோமநாதீஸ்வரர் உள்பட பரிவாரங்கள் மஹா கும்பாபிஷேகம், தீர்ததப்பிரசாதங்கள் வழங்கப்படும்.

மாலை 7 மணியளவில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இக்கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, டிவிஎஸ் சேர்மன் வேணு சீனிவாசன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி, துணை ஆணையர், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) க.ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil