படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா
பைல் படம்.
Navaratri Pooja Vidhanam -கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவி லில் நவராத்திரி விழா வருகிற 26 - ந் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு 26 - ந் தேதி முதல் 5 - ந் தேதி வரை தினமும் காலை, மாலை இருவேளை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது.
உற்சவ அம்மன் கோவில் மகா மண்டபத்தில் கொலு வைத்து, 25-ந் தேதி பார்வதி அலங்காரம், 26-ந் தேதி காமாட்சி அலங்காரம், 27-ந் தேதி மாவடி சேவை அலங்காரம், 29-ந் தேதி மீனாட்சி அலங்காரம், 30-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 1-ந் தேதி துர்க்கை அலங்காரம், 2-ந் தேதி அன்ன பூரணி அலங்காரம், 3-ந் தேதி தனலட்சுமி அலங்காரம், 4-ந் தேதி சரஸ்வதி அலங்காரம், 5-ந் தேதி திருஅவதார அலங்காரத்துடன் இரவு 8.30 மணி அளவில் பாரிவேட்டை உற்சவம், திருவீதி உலா நடக்கிறது
இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞா னம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல் கண்ணமங்க லம் புதுப்பேட்டை சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா 26-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் உற்சவ அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. இதைமுன்னிட்டு நேற்று கோவிலில் பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu