போளூர் அருகே பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்

போளூர் அருகே பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
X

போளூர் அருகே பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்

கணவர் தன் பேச்சைகேட்கவில்லை என்பதால் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த பெண்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பலதா. தன் பேச்சை கணவர் கேட்கவில்லை என மனம் உடைந்த புஷ்பலதா 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் தற்கொலை செய்ய கிணற்றில் குதித்தார். இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்தனர்.

தாய் மட்டும் உயிர் தப்பிய நிலையில் சத்தம் போட்டு உதவிக்கு அங்கு உள்ளவர்களை அழைத்து உள்ளார். அங்கிருந்தவர்களால் புஷ்பலதாவை மட்டும் காப்பாற்ற முடிந்தது. குழந்தைகள் இருவரும் சடலமாக மீட்டெடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி, சம்பவ இடத்தை பார்வையிட்டு புஷ்பலதா விடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். பின்பு புஷ்பலதா மீது கொலை வழக்கு பதிவு செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

கண்ணமங்கலம் பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு பெற்ற தாயே தனது ஒரே குழந்தையை கொலை செய்த சம்பவம் நடந்தது. தொடர்ந்து இச்சம்பவம் நடந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!