போளூரில் வணிக வளாகம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

போளூரில் வணிக  வளாகம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
X

போளூரில் வணிக வளாகம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

போளூரில் மார்க்கெட் பகுதியில் வணிக வளாகம் கட்டுவது குறித்து எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆய்வு

போளூர் பேரூராட்சி மார்க்கெட் பகுதியில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்தக் கடைகள் எல்லாம் பழுதடைந்த காரணத்தால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட முன்மொழிவு தயார் செய்யப்பட்டிருந்தது. சுமார் 150 கடைகள் கட்ட ரூபாய் 3 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினரிடம் வியாபாரிகள் அந்த இடத்தில் கடைகளைக் கட்டி தர வேண்டும் என மனு அளித்திருந்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அந்த இடத்தை ஆய்வு செய்து மீண்டும் முன்மொழிவு, புதிய மதிப்பீடுகளை தயார் செய்து அனுப்பி வைக்குமாறும், விரைவில் நிதி ஒதுக்கி இங்கு வணிக வளாகம் கட்ட முயற்சி செய்வதாக கூறினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர் உமா மகேஸ்வரி, பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture