போளூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

போளூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
X

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை பாக்கி உள்ளதாக, அவரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மேலும், தாங்கள் கொண்டு வரும் வரும் நெல் மூட்டைகளை எடை போடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால், வெளியே மழையிலும் வெயிலிலும் இருந்து நெல் மூட்டைகள் வீணாவதாக, விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு, இருப்பு அறை வேண்டும் என, எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக இதை பரிசீலிப்பதாக கூறி, அங்கிருந்த அதிகாரிகளிடம் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யுமாறு, அக்ரி கிருஷ்ண மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!