புதிய பள்ளி கட்டிடம் பணிகளை துவக்கி வைத்த எம் எல் ஏ

புதிய பள்ளி கட்டிடம் பணிகளை துவக்கி வைத்த எம் எல் ஏ
X

புதிய பள்ளி கட்டிட பணிகளை துவக்கி வைத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ

சேத்துப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டிட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய கொளத்தூர் ஊராட்சியில் ரூபாய் 32 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

போளூர் தொகுதி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். கொளத்தூர் ஊராட்சி உபரி நிதி மூலம் ரூ.17 லட்சத்தில் கட்டுவதற்கான பூமி பூஜையையும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 2 லட்சம் மதிப்பீட்டில் மாதா கோவில் தெருவுக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் போளூர் தொகுதி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்திதொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா, லட்சுமி காந்தன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதர் ராகவன், மேலானூர் வீரபத்திரன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் குப்பு, கிட்டு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிளை கழகச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு பகுதிகளில் பயணிகள், ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வார விழாவையொட்டி, சேத்துப்பட்டு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பயணிகள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆகியோரிடம் மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன் தலைமையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

துண்டுப் பிரசுரங்களில் தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும், சாலை விதிகளை மதிப்போம், விபத்தினை தவிா்ப்போம் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் ராஜா, பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!