வீடு இல்லாத இருளர் இன மக்களுக்கு வீடு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி

வீடு இல்லாத இருளர் இன மக்களுக்கு வீடு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி
X

நிவாரண உதவிகள் வழங்கும் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி

வீடு இல்லாத இருளர் இன மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதியித்துள்ளார்

சேத்துப்பட்டு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்ட சென்ற போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கனமழையால் பாதிக்கப்பட்டு சிறப்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இருளர் இன மக்களுக்கு அரிசி, காய்கறிகள், பிஸ்கட், மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர்களிடத்தில் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு நிரந்தரமாக வீட்டுமனை ஒதுக்கீடு செய்து வீடு கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

பின்னர் மருத்துவம்பாடி கிராமத்திற்கு சென்று சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் தங்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி அறிவிப்பதாக தெரிவித்தார்.

மேலும் மருத்துவம்பாடி , சென்னா நந்தல் சாலை துண்டிக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டு, அங்கு பாலம் கட்டி தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ஊராட்சி தலைவர்கள், சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture