போளூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்
தூய்மை பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாம்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சி மற்றும் களம்பூர் வட்டார மருத்துவமனையும் இணைந்து போளூர் பேரூராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு செயல் அலுவலர் முகமது ரிஜ்வான் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் சாந்தி நடராஜன் முன்னிலை வகித்தார் . பேரூராட்சி தலைமை எழுத்தார் முகமது ஈசாக் வரவேற்றார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக போளூர் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் 200 பேர் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, உடல் எடை, கொழுப்புச்சத்து ஆகியவை குறித்து பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில் உறுப்பினர்கள் மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன், களம்பூர் வட்டார மருத்துவமனை டாக்டர்கள் ஜெகன், கார்த்தி, தொழில்நுட்ப பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஆய்வாளர் சோமு நன்றி கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத் தினாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார்.
முகாமில் பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய பராமரிப்பாளர்களுடன் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் விண்ணப்பித்தனர்.
அப்போது சிறப்பு மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்து அடையாள அட்டை பெற பரிந்துரை செய்தனர். முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu