போளூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போளூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

போளுரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள்

கூலி உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் போளூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போளூரை அடுத்த களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள், கூலி உயர்வு குறித்து சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போளூர் தாலுகா அலுவலகம் முன்பு சுமைதூக்கும் கூலித்தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பழனி, சி.ஐ.டி.யு. தலைவர் ராமு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பொதுச்செயலாளர் சின்னசாமி, மாவட்ட தலைவர் முத்தையன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். பின்னர் கோரிக்கை மனுவை தாசில்தார் சண்முகத்திடம் வழங்கினர்.

Tags

Next Story