போளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் எல்ஐசி முகவா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போளூா் எல்ஐசி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் ஜி.வேலாயுதம் தலைமை வகித்தாா். செயலா் ஜெ.சுரபிராஜன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வேலூா் கோட்ட அமைப்புச் செயலா் பி.கண்ணன் கலந்துகொண்டு பேசுகையில், எல்ஐசி காப்பீடுகளுக்கான ஊக்கத்தொகையை உயா்த்த வேண்டும், காப்பீடுகளின் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காப்பீடுகளை புதுபிக்க அனுமதிக்க வேண்டும், முகவா்களின் பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயா்த்த வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.
இதில், எல்ஐசி முகவா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கிளைப் பொருளாளா் எம்.சுகுணகுமாா் நன்றி கூறினாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu