படவேடு ரேணுகாம்பாள் மகாகும்பாபிஷேக விழா
ரேணுகாம்பாள் கோவில் மகாகும்பாபிஷேக விழா
கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் புகழ்பெற்ற ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. 64 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் கருவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாகும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
இக்கும்பாபிஷேக விழாவுக்கு புதியதாக 5 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு, கோவில் முழுவதும் சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக விழாவின் துவக்கமாக 4 ம்தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக, லட்சுமி, கோபூஜை, கஜபூஜைகளுடன், கோயில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜையுடன் புதிய ராஜகோபுர வாசல் வழியாக பசு, யானைகளுடன் பக்தர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம் நடைபெற்றது.
5-ந்தேதி சனிக்கிழமை காலை விசேஷ சந்தியுடன், நான்காம் கால பூஜை, மாலை 6 மணியளவில் ஐந்தாம் கால பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 6-ந்தேதி அதிகாலை 5 மணியளவில் ஆறாம் கால பூஜையுடன், 7.15 மணியளவில் புதிய ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும், 8 மணியளவில் ரேணுகாம்பாள், சோமநாதீஸ்வரர் உள்பட பரிவாரங்கள் மஹா கும்பாபிஷேகம், நடைபெற்றது. மாலை 7 மணியளவில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி, துணை ஆணையர், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) க.ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu