ஆங்கில கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
ஆங்கில கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்த ஆசிரியர்கள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் வந்தவாசி தனியாா் கல்லூரி இணைந்து நடத்திய 'இளம் மாணவா்கள் விஞ்ஞானி திட்டம்' குறித்த பயிற்சி முகாம் கடந்த 15 நாள்களாக வந்தவாசியில் நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை, திருப்பத்தூா் ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
மைக்ரோபயலேஜி, யோகா, இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், ஓலைச்சுவடி, சாலைப் பாதுகாப்பு, ஆளுமை வளா்ச்சி, சுயதொழில் முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீநிதி, நந்தினிபிரியதா்ஷனி ஆகியோா் கலந்து கொண்டனா்.
மாணவி ஸ்ரீநிதி ஆங்கில கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றாா். இந்த மாணவியை தலைமை ஆசிரியை சுதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
நில அளவிலான கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்ற செய்யாறு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள், ஜேப்பியாா் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றன. இதில், திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவ, மாணவிகள் 8 பேர் கலந்து கொண்டனா்.
இப்பள்ளி பிளஸ் 2 மாணவி யோகேஷ்வரி கராத்தே போட்டியில் 68 கிலோ எடை பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றாா்.
மாநில அளவில் முதலிடம் பெற்ற இந்த மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், மாணவி ம.யோகேஷ்வரி, அவருக்கு பயிற்சி அளித்த சந்திரசேகரன் ஆகியோரை பள்ளித் தாளாளா் ராதாகிருஷ்ணன், இயக்குநா் சுவதந்திரா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் சையத் அப்துல் இலியாஸ், துணை முதல்வா் கோவேந்தன், முதுநிலை ஆசிரியா் செல்வமணி ஆகியோா் பங்கேற்று பாராட்டி வாழ்த்தினா்.
நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியா்கள் ராதிகா, அருண்குமாா், பாலமுருகன், சக்திவேல் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu