ஜெயலலிதா பிறந்தநாள் : திருவண்ணாமலை மாவட்ட அதிமுக கொண்டாட்டம்..!

ஜெயலலிதா பிறந்தநாள் : திருவண்ணாமலை மாவட்ட அதிமுக கொண்டாட்டம்..!
X

புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் தொண்டர்கள்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் , ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், தென்னங்கன்னு, சிறப்பு அன்னதானங்களை வழங்கினார்.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், வேங்கிக்கால் ஊராட்சி, வேங்கிக்கால் புதூர் ஆரம்பப்பள்ளியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பிரியாணி வழங்கினர். இந்த விழாவில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். பிரியாணியை அனைவரும் ஆர்வமுடன் வாங்கிசென்றனர்.

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், சந்திர பிரகாஷ் ஜெயின், பழனி, மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த நவாப்பாளையம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76- ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு கழக வர்த்தக அணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பன்னீர்செல்வம் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் பொய்யாமொழி, வக்கீல் சசிகுமார், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

செங்கம்

அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூரில் அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை சொந்த நிதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று கிழக்கு ஒன்றிய செயலாளர் பி. எல். அருணாச்சலம் முன்னிலையில் பொதுமக்களுக்கு 1500 தென்னை மரக்கன்றுகளை வழங்கினார்.

ஆரணியில் அதிமுகவினர் கொண்டாட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 76 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கொளத்தூர் ஊராட்சியில் ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் B. திருமால் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழாவில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா அவர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் 500 துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு, நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள் ,கழக நிர்வாகிகள் ,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போளூர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம், மேலாரணி, வில்வாரணி, கோயில்மாதிமங்கலம், வடமாதிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில், இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா