போளூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

போளூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

பயனாளிகளுக்கு அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அருகில் கலசபாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் உள்பட பலர் உள்ளனர்.

போளூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக 1431 -வது ஜமாபந்தி மற்றும் விவசாயிகள் மாநாடு நடந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அதனை பரிசீலனை செய்யப்பட்டு நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேசன் தலைமை தாங்கினார். போளூர் தாசில்தார் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கலசப்பாக்கம் எம்.எல்.ஏ, சரவணன். கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்ட போளூர் எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள், பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம் மற்றும் அரசு துறையை சேர்ந்த பல்வேறு அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தனி தாசில்தார் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்