தேவிகாபுரம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

தேவிகாபுரம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்
X

மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் ஆகியவற்றினை பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கினார்.

தேவிகாபுரம் அரசு பெண்கள் பள்ளியில் 10ம் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 153 மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். அதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேல்நிலை படிப்பு படிக்க அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை தலைமையாசிரியர் சரவணன் வழங்கி மாணவிகள் மேலும் நல்ல முறையில் படித்து தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், அரசு வழங்கும் நல திட்டங்களை பயன்படுத்தி கல்வியை தொடருங்கள் என வாழ்த்தி அனுப்பினார். இந்நிகழ்வின் போது உதவி தலைமை ஆசிரியர்கள் மேகலா, சடகோபன், வகுப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆகியோர் மாணவியர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story