போளூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையம் துவக்கி வைப்பு

போளூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையம்  துவக்கி வைப்பு
X

போளூர் ஒன்றியம் குன்னத்தூரில், இல்லம் தேடி கல்வி மையத்தினை தொடங்கி வைத்த,  மாவட்ட கல்வி அலுவலர். 

போளூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தை, மாவட்ட கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தின் தொடக்க விழா மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது. பின்னர் இப்பள்ளியின் 7 வது மையத்தினை தொடங்கி வைத்து மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம் பேசியதாவது:

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி பாதித்து வருகிறது. அதை போக்கும் விதத்தில் உங்கள் வீட்டின் அருகாமையிலேயே மையத்தை உருவாக்கி இருக்கிறோம். தினமும் மாணவர்கள் பாதுகாப்போடு மையத்திற்கு வர வேண்டும். மைய தன்னார்வலர்கள், மாணவர்களுக்கு கல்வி சார்ந்த விஷயங்களை கற்றுத் தர வேண்டும் . இந்தியாவில் முதல் முறையாக இத்திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது என்று பேசினார்.

நிகழ்ச்சியில், பள்ளி துணை ஆய்வாளர் ஷைனி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாஸ்கரன், பள்ளி தலைமையாசிரியர், மையப் பொறுப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்