தீயணைப்பு வீரர்களுக்கு குடியிருப்பு : திறந்து வைத்த முதலமைச்சர்..!

தீயணைப்பு வீரர்களுக்கு குடியிருப்பு : திறந்து வைத்த முதலமைச்சர்..!
X

புதியதாக கட்டப்பட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியர்

சேத்துப்பட்டு தீயணைப்பு துறை வீரர்களுக்கு குடியிருப்பு கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையானது “காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். மேலும் பேரிடர் காலங்களில் மக்களை மீட்டெடுக்கும் பணிகளையும் இத்துறை மேற்கொண்டு வருகிறது . இத்தகைய முக்கிய பணிகளை ஆற்றி வரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் பணிகள் சிறக்க கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூபாய் 54 கோடி செலவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்களுக்கான 180 குடியிருப்பு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ரூ.2.5 கோடியில் கட்டப்பட்ட தீயணைப்பு, மீட்புப் பணித்துறை வீரா்களுக்கான 13 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

சேத்துப்பட்டு கிழக்குமேடு கூட்டுச்சாலையில் ரூ.2.5 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளா்களுக்கு 13 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்தக் கட்டடங்களை, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, செய்யாறு கோட்டாட்சியா் பல்லவி வா்மா, ஆரணி எம்.பி.விஷ்ணுபிரசாத், பேரூராட்சித் தலைவா் சுதாமுருகன், செவரப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி ராமன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா்.

நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணி மாவட்ட அலுவலா் சரவணன், மாவட்ட உதவி அலுவலா் சரவணன், நிலை அலுவலா் சிவனேசன், சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் சத்தியமூா்த்தி, இந்திராணி, சேத்துப்பட்டு ஆய்வாளா் முரளிதரன், சேத்துப்பட்டு திமுக ஒன்றியச் செயலாளா் எழில்மாறன், நகரச் செயலாளா் முருகன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவா் பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினா் முனிரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!