ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களுக்கு தோட்டக்கலை துறை சார்பாக உதவி

ஜவ்வாது மலையில்  மலைவாழ்  மக்களுக்கு தோட்டக்கலை துறை சார்பாக உதவி
X

ஜவ்வாது மலையில் மிளகு சாகுபடி 

ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் உயர பலன் தரும் வகையில் பழக் கன்றுகளை தோட்டக்கலைத்துறை வழங்கியது

தோட்டக்கலை துறை சார்பாக ஜவ்வாது மலையில் மிளகு சாகுபடி ஊக்குவிக்கும் பொருட்டு இலவசமாக மிளகு கன்றுகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு மகளிர் திட்டத்தின் மூலம் இங்கு விளைந்த 1500 கிலோ மிளகு கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மிளகு செடி வேர் அழுகல் நோயால் பாதித்து மிளகு சாகுபடி குறைந்து வருகிறது. அதற்கு தேவையான மருந்து தெளித்திட அறிவுரை வழங்கப்பட்டது.

மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் உயர பலன் தரும் வகையில் பழக் கன்றுகள் தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையிலும், சில வகை பழக் கன்றுகள், காய்கறி வகைகள், இலவசமாகவும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது, என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!