தமிழகத்தில் ஹிஜாப் சர்ச்சை: +2 மாணவியை கண்டித்த அரசு பள்ளி ஆசிரியை

தமிழகத்தில் ஹிஜாப் சர்ச்சை: +2 மாணவியை கண்டித்த அரசு பள்ளி ஆசிரியை
X

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள்

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என பள்ளி ஆசிரியை கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகாவில் கடந்த பிப். மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துதிருந்தது. அங்கு பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணியப் பள்ளி, கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது, இது தொடர்பான வழக்கு அங்கு இப்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஆசிரியை லட்சுமி என்பவர் +2 மாணவிகள் சிலரை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், ஏற்கனவே 2 வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவித்த மாணவியின் பெற்றோர், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியை சுதா கூறுகையில் , நான் இன்றுதான் செவ்வாய்க்கிழமை இந்த பள்ளியில் புதியதாக தலைமை ஆசிரியையாக சேர்ந்துள்ளேன். இங்கு நடந்த பிரச்சினைகள் எதுவும் எனக்குத் தெரியாது ஆனாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர். தற்போது பள்ளிக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்