போளூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

போளூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
X

தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

போளூர் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்

போளூர் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கடலூர்- சித்தூர் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால் ரவுண்டனா அமைப்பதற்கு சென்னை நெடுஞ்சாலைத்துறைசாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள கடலூர்-சித்தூர் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால் சாலை பாதுகாப்பினை உறுதிப்படுத்த விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு, சாலை பாதுகாப்பு (CRIDP) 2024-25 திட்டத்தின் கீழ் சாலை சந்திப்பை மேம்படுத்த புதிய ரவுண்டானா அமைப்பதற்கு சென்னை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கண்காணிப்புப்பொறியாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பஸ்களும் மற்றும் தனியார் பஸ்களும் மினி பஸ் மற்றும் கல்லூரி வாகனங்களும் ஏராளமாக வந்து செல்கிறது. அப்போது இட நெருக்கடியால் பெரும்பாலான பஸ்கள் பேருந்து நிலையம் உள்ளே வராமல் வெளியே உள்ள அகலமான சாலையில் திரும்பி செல்கிறது அதனால் சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுவதோடு பொதுமக்களுக்கும் அச்சமும் நிலவி வருகிறது.

ரஜினி ரசிகர்களும் கொண்டாடிய கமல் படம்! அஜித் ரசிகர்களுக்கு பிடித்த விஜய் படம்!

மேலும் 4 வழிகள் சந்திக்கும் இந்த இடத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. எனவே இந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடந்த மாதம் இங்கு வந்து முதல் கட்டமாக ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு (2024-2025) திட்டத்தின் கீழ் சாலை சந்திப்பை மேம்படுத்த ரூ. 1 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை நெடுஞ்சாலைத்துறைசாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் போளூர் பேருந்து நிலையம் அருகில் ரவுண்டானா அமைய உள்ள இடத்தை அதற்கான வரைபடத்தைவைத்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது உடன் விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்டப்பொறியாளர், ஸ்ரீகாந்த் திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை, கோட்டப்பொறியாளர் ராஜகுமார், போளூர் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர் திருநாவுக்கரசு, போளூர் நெடுஞ்சாலைத்துறை, உதவிப்பொறியாளர் வேதவள்ளி , மற்றும் கலசபாக்கம் நெடுஞ்சாலைத்துறை, உதவிப்பொறியாளர் வெங்கடேசன், மற்றும் வருவாய்த்துறை,நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!