போளுரில் கள்ளச்சாராயம் விற்ற நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

போளுரில் கள்ளச்சாராயம் விற்ற  நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
X
போளுரில் கள்ளச்சாராயம் விற்ற நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்ய மாவட்டஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த ஜெகநாதன், மணி (எ) சுருட்டல் மணி, விஜயகுமார், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி நிர்மலா அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும், கோபிநாத் என்பவர், கீழ்ப்பாக்கம் கிராமத்தில் சுகநதி ஆற்றுப்படுகைகளில் மணல் திருட்டில் ஈடுபட்டதற்காகவும், மேலும் அதனை தடுக்க சென்ற தலைமைக்காவலரை தாக்கிய குற்றத்திற்காகவும், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் .B.முருகேஷ்,, மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
வணிக வளர்ச்சியில் புதிய வெற்றிக்குறி – செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மேம்பட்ட திட்டமிடல் முறைகள்!