போளூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: 200 கிராம் பறிமுதல்

போளூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது:  200 கிராம் பறிமுதல்
X
போளூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்; 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வசூர் கூட்டு ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் (வயது 34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story