பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இலவச சமையல் எரிவாயு அடுப்புகள்
இலவச சமையல் எரிவாயு அடுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில், சேத்துப்பட்டில், ஏழை எளிய மக்கள் 150 பேருக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன.
சேத்துப்பட்டு அண்ணாமலையார் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 150 பேருக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு அண்ணாமலையார் கேஸ் உரிமையாளர் ரமணிபாய் தலைமை வகித்தார். மேனேஜர் சத்தியன் முன்னிலை விகித்தார்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சேத்துப்பட்டு தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி சுமதி, ஏழை, எளிய மக்கள் 150 பேருக்கு இலவச சிலிண்டர், அடுப்பு, ரெகுலேட்டர், டியூப், லைட்டர் ஆகியவற்றை வழங்கி பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பயனாளிகளிடம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்கள் மாதிரி உழவர் சந்தை அமைத்து நேரடி விற்பனை !
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் கோழிப்புலியூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் நடத்திய உழவன், உழவர் சந்தையை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
நடப்பு பருவ பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பொருளியல் என்ற பாடமும், தமிழில் வளரும் வணிகம் என்ற பாடமும், கணிதத்தில் ரூபாய் மற்றும் கூட்டல் கழித்தல் போன்ற பாடங்களும் உள்ளன.
மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பித்தலை விட நன்றாகப் புரிந்துகொள்ளும் வகையில் பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியன், கோழிப்புலியூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று காலை 6ம் வகுப்பு மாணவர்கள் ஒரு நாள் உழவன், உழவர் சந்தை அமைத்திருந்தனர்.
பள்ளி மாணவர்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரைகள், காய்கறிகள், நெல்லிக்காய், கொய்யா, முட்டைகள், தேங்காய், வேர்க்கடலை, சுண்டல் போன்ற பொருள்களை உழவன், உழவர் சந்தையில் வைத்து விற்பனையை தொடங்கினர்.
இதனை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், பஞ். தலைவர் சந்தோஷ் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு உழவர் சந்தையில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
இதன்மூலம், மாணவர்கள் இயல்பான முறையில் வணிகம் செய்யும் முறையை கற்றுக்கொண்டனர். உழவர் சந்தை அமைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் முரளி, ஜெகராஜ், ஆனந்தி, விமலி, ரூபிணி, பத்மபிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu