Former MLA Photo Open Function போளூர் முன்னாள் எம்எல்ஏ திருவுருவப்படம் திறப்பு
போளூர் முன்னாள் எம்எல்ஏ படத்திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் வேலு
Former MLA Photo Open Function
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி சார்பில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் நினைவேந்தல் நினைவு நிகழ்ச்சி, படத்திறப்பு விழாவும் போளூரில் நடைபெற்றது.இதில் வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சேகரன், பொதுக்குழு உறுப்பினர் காசி ,ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு படத்தை திறந்து வைத்து பேசியதாவது
மறைந்த முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் படத்தை திறந்து வைப்போம் என எண்ணியதில்லை. மனிதன் பிறந்து உலகில் புகழோடு வாழ வேண்டும் என வள்ளுவன் சொன்னது போல் வாழ்ந்து காட்டியவர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன்.
போளூர் தொகுதியில் பலரை உருவாக்கியவர், திமுகவினருக்கு உறுதுணையாக விளங்கினார். அரசியல் வாழ்க்கையில் மிகச்சிறந்த பணியாளர், மூன்று தலைமுறை அரசியல்வாதி, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு பாலமாக இருந்தவர் , இப்போது படமாக இருக்கிறார்.
பல நேரங்களில் திமுகவினருக்கு ஆலோசனைகளை தருவார். ஒரு பணியை எடுத்துக் கொண்டால் கடைசி வரை எடுத்து முடிப்பார், போளூர் தொகுதி திமுகவினரை காப்பாற்றியவர், நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர், சிறுபான்மை இனத்தவர் என்றாலும் எல்லாராலும் பாராட்டு பெற்றவர் திமுக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் .
போளூரில் கலைஞர் மாளிகையை எழுப்பியவர், திருவண்ணாமலை மாவட்டமே என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும், அவர் செய்த பணிகளை என்றும் திமுகவினர் போற்றுவார்கள் ,அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என பேசினார்.
இதில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் ,மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை போளூர் நகர திமுக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu